முதல் பக்கம்

Nov 13, 2010

வண்ணம் பார்க்கும் பறவைகள் ..!

 
    வண்ணம் பார்க்கும் பறவைகள் ..!
  அன்பானவர்களே.. அனைவருக்கும் காலை வணக்கம். நம்மிடையே சில மாடுகளுக்கு சிவப்பு வண்ணம் பிடிக்காது என்று ஒரு நம்பிக்கை உலவி வருகிறது.. அது உண்மை என்பதுபோல, காளை விரட்டு விளையாட்டுகள் இங்கும், அயல் நாடுகளிலும் கூட நடகின்றன.  பல ஊடகங்களும் இந்த நம்பிக்கை பொய்யை பலமாக விதைத்து வருகின்றன.பாலுட்டிகளில், குரங்கினம் மற்றும் மனித இனத்துக்கு மட்டும் தான், வண்ணம் அறியும் கண்கள் உள்ளன. ஆடு, மாடு, நாய் போன்ற எந்த பாலுட்டியும் வண்ணத்தை பார்க்க முடியாது. அவை கருப்பு , வெள்ளை மற்றும் சாம்பல் வண்ணத்தில் மட்டுமே. பொருட்களை பார்க்க முடியும். நம் கண்களில், வண்ணம் மற்றும் கருப்பு வெள்ளை பார்க்க கண் திரையில் , குச்சிகள் மற்றும் கூம்புகள் உள்ளன. குச்சிகள் கருப்பு வெள்ளையையும், கூம்புகள் வண்ணத்தையும் பார்க்கின்றன. 
       ஆனால், பறவைகள், பூச்சிகள் வண்ணம் பார்க்க வல்லவை. நம்மைவிட அதிக நிறங்களை நிறங்களின் சாயல்களை, முக்கியமாக வண்ணத்துப்பூச்சிகள் பார்க்கின்றன.     மனிதர்களால் காணமுடியாத, புற ஊதாக் கதிர்களையும் காணும் திறன் பெற்றவை பறவைகள். இவைகளின் ரெட்டினாவில் மனிதர்களைவிட அதிக எண்ணிக்கையில் ஒளி வாங்கி கூம்புகளும் , அதிக நரம்பு இணைப்புகளும் உள்ளன. மேலும் குறைவான ஒளியிலும் நன்கு பார்க்கும் அளவுக்கு, அடர்வாக கூம்புகள் உள்ளன. கடல் பறவைக ளின் துரபார்வை துல்லியமாக அமைய, அவைகளின் கண்களில், சிவப்பு அல்லது மஞ்சள் எண்ணெய் சுரக்கிறது.மனித கண்ணில் ஒரு ச.மி.மீ க்கு 20 ,000  ஒளிவாங்கிகள் உள்ளன. ஆனால் பறவைகளில்,40 ,000 முதல் 1 ,20 ,000 ஒளி வாங்கிகள் உண்டு. பகலில் இரை தேடும் பறவைகளுக்கு, 80 -90 % ஒளி வாங்கிகள் கூம்புகளாகவும் இருக்கின்றன.ஆனால் இரவில் இரை தேடும் பறவைகளுக்கு கிட்டத்தட்ட அனைத்து ஒளி வாங்கிகளும் குசசிகளாகவே உள்ளன. அனைத்தும் குச்சிகள்தான் 
 ஆந்தையின் கண்கள்மற்றவைகளை விட  2 .2 மடங்கு பெரியதுமனிதனை விட 5 மடங்கு அதிகமான ஒளி வாங்கி செல்கள் . இவை அகச்சிவப்பு கதிரிலும் கூட பார்க்கும்.இருகண் நோக்கி போல இதன் கண் செயல்படுகிறது,இதன் உடலின் எடையில் 5 % கண் உள்ளது. 



--
Prof.S.Mohana, TNSF,
Mobile:94430 44642

No comments:

Post a Comment