முதல் பக்கம்

Nov 6, 2010

அறிவியல் இயக்க பயிற்சி முகாம

 
 
பதிவு செய்த நாள் : ஜூலை 24,2010,:39  
ஈரோடு: 
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வழிகாட்டி ஆசிரியர்கள் பயிற்சி முகாம் ஈரோட்டில் நேற்று நடந்தது.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை முன்னிட்டு, மாவட்டத்தின் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கான, வழிகாட்டி பயிற்சி முகாம் ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. பயிற்சியில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மாநிலக் கருத்தாளர்கள் உமா சங்கர், பெருமாள், மாவட்ட கருத்தாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பயிற்சியளித்தனர். ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி வரவேற்றார். மாவட்ட தலைவர் மணி தலைமை வகித்தார். கல்வி ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் திட்ட விளக்கமளித்தார். முன்னாள் விதை சான்றுதுறை இயக்குநர் ரங்கசாமி, வேளாண் அலுவலர் (ரசாயனம்) ரங்கசாமி ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் மணி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment