முதல் பக்கம்

Nov 6, 2010

சிந்தித்தால் பெரிய தவறுகளை தவிர்க்க முடியும் :நீதிபதி சின்னப்பன் அறிவுரை

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2010,02:00 
விழுப்புரம் : பொது மக்களிடம் சட்ட அறிவு குறைவாக இருப்பதால் குற்றங்கள் அதிகரிக்கின்றன என மாவட்ட நீதிபதி சின்னப்பன் பேசினார். விழுப்புரம் மாவட்ட இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் மற் றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 2009-10ம் ஆண்டு அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப் பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா விழுப்புரத்தில் நடந்தது.  இந்தியன் வங்கி ஊழியர் அசோஷியேஷன் மாநில செயற்குழு உறுப்பினர் மனோகரன் தலைமை தாங்கினார். இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் மாநிலப் பொது செயலாளர் கோபால், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் சாந்தி முன்னிலை வகித்தனர். அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் வீரபாஸ்கரன் வரவேற்றார். சி.இ.ஓ., குப்புசாமி அதிக மதிப் பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் கள் வழங்கி பேசினார்.

விழுப்புரம் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி சின்னப்பன் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசியதாவது: அரசு இலவச சட்ட உதவி மையங்களை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட வேண் டும். போதிய கல்வி அறிவும், சட்ட விழிப்புணர்வும் இல்லாததே குற் றங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளன. கோபம் ஏற்படும் போதும், சிக்கலான நேரங்களிலும் ஒரு சில நிமிடங்கள் சிந்தித்து செயல்பட் டால் பெரிய தவறுகள் நடப்பதை தவிர்க்க முடியும். விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைகள் பாலியல் தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருகின்றன. சமூக அமைப்புகள் மாணவர்களின் கல்வி ஈடுபாட்டையும், பொது அறிவையும் ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற பாராட்டு விழாக்கள் நடத்துவது வரவேற்கத்தக்கது.  ஒவ்வொருவரும் தாம் பெற்ற படிப்பு ரீதியான தகவல்கள் மற்றும் முன்னேற்றப் பாதைகள் குறித்து நம் பின்னால் வரும் சந்ததியினருக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட நீதிபதி சின்னப்பன்  பேசினார். இ.எஸ்., கல்விக்குழுமத் தலைவர் சாமிக்கண்ணு, விழுப்புரம் இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் டோமி ஜி. பூவாட்டில் உட்பட பலர் கலந்து கொண்டனர். அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment